கிளிநொச்சியில், ‘புதிய மழை’ புத்தக கண்காட்சி   

கிளிநொச்சியில் ‘புதிய மழை’ புத்தக கண்காட்சியும் விற்பனையும் நேற்று நடைபெற்றது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் குறித்த கண்காட்சியும் விற்பனையும் நடாத்தப்பட்டது.

கரைச்சி பொது நூலகத்தில் நேற்று காலை 10.00 மணி தொடக்கம் பி.ப 3.00 மணி வரை இடம்பெற்ற குறித்த கண்காட்சி,விற்பனையில் உளளூர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்ட எழுத்தாளர்களின் ஆக்கங்கள் வைக்கப்பட்டன.

நிகழ்வில் எழுத்தாளர்கள், படைப்பாளிகள், வாசகர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டதுடன், புத்தகங்களையும் பெற்றுக்கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!