எரிவாயு பிரச்சனை விரைவில் தீர்வு-எரிவாயு நிறுவனங்கள்

சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு பற்றாக்குறை எதிர்வரும் சில தினங்களில் இயல்பு நிலைக்கு வரும் என எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது நிறுவனங்களுக்கு சமையல் எரிவாயு இருப்பில் கிடப்பதை வைத்து , எதிர்வரும் மூன்றரை மாதங்களுக்கு அவற்றை பாவிக்க முடியும் என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு பற்றாக்குறை தொடர்பில் எரிவாயு நிறுவனங்கள், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு பற்றாக்குறை தற்காலிகமானது என குறிப்பிட்ட அவர்கள், சர்வதேச ரீதியில் எரிவாயு விநியோகம் தடைப்பட்டதை தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளது . (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!