மர்மக் காய்ச்சலால் டென்மார்க்;வாசி யாழில் உயிரிழப்பு!

டென்மார்கில் இருந்து இலங்கை வந்த முதியவர் மர்ம காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில,; தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

டென்மார்க்கில் வசித்துவரும் 67 வயதுடைய வேலுப்பிள்ளை சிவனேசன் எனும் முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மனைவி, பிள்ளைகள் டென்மார்கில் வசித்து வருகின்றநிலையில், கடந்த மே மாதம் சுண்னாம் பகுதியில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக குறித்த முதியர் இலங்கைக்கு வருகைதந்திருந்தார்.

இந்நிலையில், இரண்டு நாட்களாக ஒரு வித மர்மக் காய்ச்சலினால் முதியவர் அவதியுற்றுள்ளார்.

இதனையடுத்து, உறவினர்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு முதியவரை அழைத்து சென்று அனுமதித்திருந்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில், முதியவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணையினை வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதணைக்கு பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!