தேசிய பாதுகாப்பு தொடர்பில் யாருக்கும் திறமை கிடையாது – கோட்டா!!

தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித அனுபவங்களும், திறமைகளும் தற்போதைய அரசாங்கத்தில் எவருக்கும் கிடையாது எனத் தெரிவித்துள்ள பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவதற்காகவே தேர்தல் கொள்கை பிரகடனத்தில் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பிபிலை நகரில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,

வழங்கப்படும் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்.இலங்கையில் பிரதான ஜீவனோபாய உற்பத்தியான விவசாயத்திற்கு உரிய நிலை வழங்கப்படும்.

எக்காரணிகளுக்காகவும் விவசாய உற்பத்திகளை இரண்டாம் பட்சமாக்க மாட்டேன். வீழ்ச்சியடைந்துள்ள தேசிய உற்பத்திகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்திற்குள் மேம்படுத்தப்படும்.

வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்தினை மீள் கட்டியெழுப்ப விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இலவச உரமாணியம் வழங்கப்படுவதுடன், விவசாயிகளுக்காக இலகு கடன் வசதிகளும் வழங்கப்படும்.

விவசாயத்தினை அடையாளமாகக் கொண்டு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் விவசாயதுறையில் பயன்படுத்திய தொழினுட்ப முறைமைகள் அனைத்தும் எமது நாட்டு விவசாய துறையிலும் இலவசமான முறையில் செயற்படுத்துவோம் எனத் தெரிவித்தார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!