தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி சஜித்திற்கு ஆதரவு!!

தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியானது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது.

தேசிய ஜனநாயக மக்கள் முன்னணியினருக்கும், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கும், நேற்று கொழும்பில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் பிரத்தியேக வாசஸ்தலத்தில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

குறித்த சந்திப்பானது தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் ம.ஆனந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பில் வடக்கு மக்களின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைவாக தேசிய ஜனநாயக மக்கள் முன்னணியிரால் முன்மொழியப்பட்ட 25 பாரிய துறைசார்ந்த அபிவிருத்தி வேலைத் திட்டங்களை தனது ஆட்சியில் நிறைவேற்றி தருவதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து, தேசிய ஜனநாயக மக்கள் முன்னணியானது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இச்சந்திப்பில் தேசிய ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர்களான சபாஸ்சிங்கம், திலக் உடுகம, செயலாளர் ஜீ.சந்திரப்பிரகாஸ், தேசிய அமைப்பாளர் ரஜனிக்காந், கொள்கை பரப்பு செயலாளர் றோய்ஜெயக்குமார், கட்சியின் பொருளாளர் வசந்தகுமார், மகளிர் அணியின் தலைவி செல்வராணி மற்றும் வவுனியா,மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கிராம மட்டத் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!