சஜித் அதிக வாக்குகளால் யாழில் வெற்றிபெறுவார் – நளின்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று இலட்சத்திற்கு அதிகமான வாக்குகளை சஜித் பிரேமதாசவிற்கு மக்கள் வழங்குவார்கள் என அபிவிருத்தி உத்திகள், மற்றும் வர்த்தக துறை பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

கிளிநொச்சி தொண்டமான்நகர் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

‘நேற்றைய தினம் டக்ளஸ் தேவானந்த பெரும் தொகை நிதியை செலவு செய்து பேருந்துகளில் மக்களை ஏற்றிஇறக்கினர்.
அவ்வாறே மக்கள் குறித்த பிரசார கூட்டத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

பெரும் தொகை காசு செலவு செய்யப்பட்டு வவுனியா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், சிங்கள பிரதேசங்களில் இருந்துமே மக்கள் கொண்டு வரப்பட்டு அங்கு காண்பிக்கப்பட்டனர். உண்மையில் அங்கு மக்கள் வருகை தரவில்லை.

நாமல் ராஜபக்ச தென்னிலங்கையில் ஒருவகையான கருத்துக்களையும், வடக்கில் வந்து ஒருவகையான கருத்துக்களையும் கூறுகின்றார்.

ஆனால் சஜித் பிரேமதாச அவ்வாறு இல்லை. தெற்கில் சொல்வதையே வடக்கிலும் சொல்வார்.
யாழ்ப்பாணம் விமான நிலையம் தொடர்பில் தென்னிலங்கையில் ஒருவகையான இனவாதம் பேசப்பட்டது.
அதே வடக்கில் நாமல் இன்னொருவகையில் கருத்து தெரிவித்தார்.
இவர்கள் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு வகையான கருத்துக்களை கூறுகின்றனர். வடக்கில் பல பகுதிகளிலும் சஜித் பிரேமதாச பிரசார கூட்டங்களில் பங்குகொள்ளவுள்ளார்.

அவரை மக்கள் ஆதரிப்பார்கள். வடக்கிலிருந்து குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து மூன்று இலட்சத்திற்கு அதிகமான வாக்குகள் சஜித் பிரேமதாசவிற்கு கிடைக்கும்.’ என பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!