வவுனியா பட்டிக்குடியிருப்பில் தாயொருவர், தனது இரண்டு பிள்ளைகளையும் கிணற்றில் போட்டு, தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
அண்மையில் விபத்தில் மரணித்த வவுனியா பட்டிக்குடியிருப்பைச் சேர்ந்த உதயன் என்பவருடைய மனைவி, தனது நான்கு வயது பெண் பிள்ளையையும் மற்றும் இரண்டரை வயது ஆண் பிள்ளையையும் கிணற்றுக்குள் போட்டுவிட்டு, தானும் கிணற்றுள் குதிக்க முயன்றபோது, அயலவர்களால் தடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார்.
எனினும், குறித்த தாயின் இரண்டரை வயதுடைய மகன் கிணற்றுக்குள்ளே மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிருடன் மீட்கப்பட்ட 4 வயது பெண்குழந்தை, அவசர சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் மரணித்துள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து, தாயாரை நெடுங்கேணி பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.(சி)