கிழக்கின் சிறந்த ஆண்டறிக்கைக்கான பாடசாலையாக வினசன்ற் மகளிர் கல்லூரி தெரிவு!!

இலங்கை டபல் ஏடி நிறுவனத்துடன் கல்வி அமைச்சு இணைந்து 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் பாடசாலைகிடையில் நடாத்தப்பட்ட சிறந்த ஆண்டறிக்கைக்கான 12 ஆவது போட்டி கொழும்பு பண்டாராநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

கொழும்பு பண்டாராநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆண்டறிக்கைக்கான போட்டியில் மாகாண மட்டத்தில் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலை, 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆண்டறிக்கையை சமர்பித்ததாக தெரிவு செய்யப்பட்டு, மாகாண மட்டத்தில் சிறந்த ஆண்டறிக்கைக்கான பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதாக பாடசாலை அதிபர் சுபாகரன் ஹரனியா தெரிவித்தார்.

இந்த ஆண்டு அறிக்கையினை தயாரித்த ஆசிரியர்களை கௌரவித்து அந்த விருதினை, பாடசாலை அதிபர் ஆசிரியர்களிடம் கையைளிக்கும் நிகழ்வு இன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!