ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பத்தாதி கொல்லப்பட்டமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் ஒரு நடவடிக்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்தமைகுறித்து அமெரிக்க ஜனாதிபதியை வாழ்த்துவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி அமெரிக்க இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது . (சே)