பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 வீரகங்கனைகள் முதல் சுற்று வெற்றி

உலக தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் 49வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் ஷென்ஜென் நகரில் நேற்று முன்தினம் ஆரம்பமானது எதிர்வரும் 3ம் திகதிவரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள வீராங்கனைகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

ரெட் பிரிவு முதல் சுற்று போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்டி ஆஸ்திரேலியா
7ம் நிலை வீராங்கனையான பெலின்டா பென்சிச்சை சுவிட்சர்லாந்து சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை இழந்த ஆஷ்லி பார்டி அடுத்த 2 செட்களிலும்
சிறப்பாக செயல்பட்டு பெலின்டா பென்சிச்சை திணறடித்தார். 1 மணி 57 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஆஷ்லி பார்டி 5-7, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் பெலின்டா பென்சிச்சை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கினார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கும் நவோமி ஒசாகா ஜப்பான், 6வது இடத்தில் உள்ள பெட்ரா கிவிடோவாவுடன் செக்குடியரசு மோதினார். 2 மணி 39 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் நவோமி ஒசாகா 7-6 (7-1), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் கிவிடோவாவை சாய்த்து முதல் வெற்றியை ருசித்தார்.

2-வது நாளான நேற்று நடந்த ஊதா பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 8-வது இடத்தில் இருப்பவருமான எலினா ஸ்விடோலினா உக்ரைன் 7-6 (14-12), 6-4 என்ற செட் கணக்கில் 2-வது இடத்தில் உள்ள கரோலினா பிளிஸ்கோவாவுக்கு செக்குடியரசு அதிர்ச்சி அளித்து வெற்றியை சொந்தமாக்கினார்.

இன்னொரு போட்டியில் விம்பிள்டன் சாம்பியனும், தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 3-6, 7-6 (8-6), 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்க ஓபன் சாம்பியனான பியான்கா ஆன்ட்ரீஸ்குவை கனடா தோற்கடித்தார். இந்த ஆட்டம் 2 மணி 34 நிமிடம் நீடித்தது. (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!