16 ஆம் திகதி, தூய்மையான அரசாங்கம் உருவாக்கப்படும் – சஜித்!!

பாதாளக்குழுவினர் உள்ளிட்ட அனைத்துக் குற்றவாளிகளையும், எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் ஓய்வு பெற்றுக் கொள்ளுமாறு, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மாவத்தகமையில் நேற்று இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘தூக்கு மேடை பற்றி இவர்கள் பேசினார்கள். மின்சாரக் கதிதைக் குறித்து பேசினார்கள். இவையெல்லாம் மக்களுக்கு ஞாபகம் உள்ளதா?

முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் பாதுகாப்பை வழங்குவேன் என்பதை நான் இவ்வேளையில் உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.

52 வயதுடைய எனக்கு, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய சக்தி இன்னும் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. நான் ஜனாதிபதியாக விரும்புவது, அரச மாளிகைகளில் சொகுசு வாழ்க்கையை வாழ்வதற்கு அல்ல.

மக்களுக்கு சேவை செய்வதே எமது நோக்கமாகும். அரச மாளிகைகள் அனைத்தும் மக்களுக்கு வழங்கப்படும். எனக்கும் சில சந்தர்ப்பங்களில் களைப்பு ஏற்படும்.

அப்போதெல்லாம் எனக்கு எனது தந்தையின் முகம் தான் தோன்றும். இதனை அடுத்து எனக்கு மீண்டும் உற்சாகம் கிடைத்து விடும். அடுத்த 16 ஆம் திகதி ஸ்தாபிக்கப்படும் எமது அரசாங்கம் தூய்மையான அரசாங்கமாக இருக்கும்.

இதில் எந்த திருடர்களுக்கும் இடமில்லை. பதாள குழுவினர் உள்ளிட்ட அனைத்துக் குற்றவாளிகளுக்கும், இவ்வேளையில் நான் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன்.

அனைவரும் இப்போதே உங்கள் வேலைகளில் இருந்து ஓய்வுப் பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாவிட்டால், 16 ஆம் திகதிக்கு பின்னர் பாரிய நஸ்ட ஈட்டை வழங்க வேண்டியேற்படும்.

4 வருடங்களாக இருந்த இதே ஆட்களுடன் தான், நாம் எமது அடுத்த கட்ட பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால், இவ்வாறான ஆட்களுடன் பயணத்தை மேற்கொள்ள நான் என்றும் தயாரில்லை என்பதை இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!