சிறையில் உள்ள முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவர் – கோட்டா!!

இலங்கையர் என்ற ரீதியில், நாம் எல்லோரும் ஒன்றாக வாழ வேண்டும் என, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டம், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.

நீங்கள் இந்தப் பகுதியில் காணுகின்ற அபிவிருத்தி எல்லாமே, மஹிந்த ராஜபக்ஷவுடைய காலத்தில் தான் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபனத்திலே, விஷேடமாக நான் பேசியிருப்பது அபிவிருத்தியைப் பற்றி.

அந்த தேர்தல் விஞ்ஞாபனத்திலே, விவசாயம் பற்றி நான் பெரிதும் பேசியிருக்கிறேன். இதை ஒரு மக்களுடைய விஞ்ஞாபனமாகவே உருவாக்கி இருக்கிறேன்;.

பல மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்துவதற்கு, அங்கே நான் பல வழிகளை முன்மொழிந்திருக்கிறேன்.
அதேபோல மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது பற்றியும், பல யோசனைகளை முன்வைத்துள்ளேன்.

இப்போது ஆசியாவில், குறிப்பாக இந்தியா, சீனா போன்ற நாடுகளின் முன்னேற்றத்திற்கான காரணம், அறிவுசார்ந்த பொருளாதார முறை.
இது எங்களுக்கு ஒரு சிறந்த சந்தர்ப்பம்.

இங்குள்ள பல இளைஞர் யுவதிகள் புத்திசாலிகள். எனவே அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவர்களுக்கு குறுகிய கால பயிற்சியாக தகவல் தொழில்நுட்பம் போன்ற எல்லா அறிவையும் பெற்றுக் கொடுப்பேன். இந்தியாவிலும் கூட இப்படி குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு பொருளாதார விருத்தியை ஏற்படுத்துவதற்கும், இந்த இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை கொடுப்பதற்கும், வர்த்தக முயற்சியில் ஈடுபடுவதற்கும் நான் ஆவணை செய்வேன்.

எமது எதிர்காலத்தை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அந்த எதிர்காலத்தை, சௌபாக்கியமான எதிர்காலமாக மாற்றுவதற்கான யோசனைகளைத் தான், எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியுள்ளேன். அவை செய்ய முடியாத வாக்குறுதிகள் அல்ல.

நாம் இலங்கையர் என்ற ரீதியில் எல்லோரும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

எம்மிடம் 13 ஆயிரம் எல்.ரி.ரி உறுப்பினர்கள் சரணடைந்தார்கள். அப்படி சரணடைந்த போது, நாட்டில் எங்கேயும் இல்லாதவாறு, இலங்கையிலே மிகப் பெரிய புனர்வாழ்வு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தோம்.

அதேபோல் எதிர்காலத்திலும் மீதமாக உள்ள 274 பேரையும் புனர்வாழ்வளித்து விடுவிப்போம் என மிகவும் உறுதிபட கூறுகிறேன். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!