வீட்டு உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்- தபால் மா அதிபர்

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர்; அட்டைகளை விநியோகிக்கும் முக்கிய பணி இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை சனிக்கிழமை ஆரம்பமான போதிலும் இதன் முக்கிய பணி இன்று ஆரம்பமானதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்காக தபால்காரர் வீடுகளுக்குவரும் போது வீட்டில் வளர்க்கப்படும் நாய் மற்றும் செல்லப்பிராணிலிருந்து தபால்காரர்களை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தபால் மா அதிபர் வீட்டு உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!