தற்காலிக அடையாள அட்டைக்கு எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விண்ணப்பிக்களாம்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தற்காலிக அடையாள அட்டையை பெறுவதற்கான, விண்ணப்பங்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு தமது அடையாளத்தை நிரூபிப்பது கட்டாயமானது.

இதற்காக தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச்சீட்டு, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அனுமதி அட்டை என்பவற்றைப் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த தற்காலிக அடையாள அட்டைகளை பொற்றுக்கொள்வதற்கு கிராம உத்தியோகத்தர் அல்லது தோட்டத்தில் வேலை செய்பவராயின் தோட்ட அதிகாரியிடம் உறுதிச் சான்றிதழை பெற்று மாவட்ட தேர்தல் அலுவலகத்திடம் ஒப்படைத்து வாக்களிப்பதற்கான தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது .

ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கும் போது இந்த தற்காலிக அடையாள அட்டை, வாக்காளர் வாக்களிகத்த பின்னர் வாக்களிப்பு மத்திய நிலையத்தின் அதிகாரியினால் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும் என மேலும் தெரிவிவிக்கப்பட்டுள்ளது. (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!