ஜனாதிபதி வேட்பாளர்கள் இனவாதம்,மதவாதம் பரப்புவதாக தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது குரோதத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளுக்கு ஊடகங்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவிக்கும் சில கருத்துககளால் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதராக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

வேட்பாளர்கள் இனவாதம் மற்றும் மதவாதம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!