ஆழ் கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜித் உயிருடன் பத்திரமாக மீள வேண்டுமென இலங்கை யாழ்ப்பாணம் கோப்பாய் மக்கள் பிரார்த்தனை.

வலிகாம் கிழக்குப் பிரதேச சபை தலைவர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் நேற்று காலை 9.30 மணிக்கு கோப்பாய் கண்ணகை அம்மன் சனசமூக நிலையத்தில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம அமைப்புக்களின் தலைவர்கள், சனசமூக நிலையத்தலைவர்கள், ஸ்டார் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .

தமிழ்நாடு திருச்சி மாவட்டம் மணற்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டிக் கிராமத்தில் கைவிடப்பட்டிருந்த ஆழ் கிணற்றுக்குள்விழுந்த சிறுவன் சுஜித் நலமுடன் மீட்கப்படவேண்டும் பிராத்தனையில் ஈடுப்பட்டனர்.

பிரார்த்தனையின் போது வலிகாமம் கிழக்குப் பிதேச சபைத் தலைவர் , ஒரு சிறுவன் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறான். அச் சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இந்த உலகில் வாழவேண்டும். அதற்காக இலங்கையில் இருந்து கொண்டு எமது வேண்டுதல்களை வெளிப்படுத்தி நிற்கின்றோம் என தெரிவித்தார..

இன்றைய தினம் தீபாவளி தினம். எமது மக்கள் வெகுவிமர்சையாக இத் தினத்தினை கொண்டாடுவர். ஆனால் இம்முறை எமது பிரதேசங்களில் எல்லோரும் குழந்தை காப்பாற்றப்பட்டுவிட்டதா? காப்பாற்றப்பட்டுவிட்டதா? என்ற ஏக்கத்தினையே வெளிப்படுத்துகின்றனர். இன்று காலை முதல் என்னைச் சந்தித்த சகலரிடமும் நான் அதனைக் காண்கின்றேன் என தெரிவித்திருந்தார் .

மணித்தியாலங்கள் கடக்கின்றமையும் தொழிநுட்ப ரீதியிலான முயற்சிகளில் நிலவும் தாமதங்களும் இயற்கையின் இடையூறுகளும் நாம் பதைத்துப்போகின்றோம். இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்படுகையில் எம் மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்றுகுவிக்கப்படும் போது தமிழ்நாட்டில் பொதுமக்கள் எந்தளவு தூரம் பதைத்தீர்களோ அதுபோன்ற பதைப்பினையும் பிரார்த்தனையினையும் ஈழத்தமிழர்களான நாம் கொண்டிருக்கின்றோம். இன்றைய தீபாவளி தினத்தினை சுஜத்திற்கான பிரார்த்தனையுடனான காத்திருப்பாகவே நாம் கடக்கின்றோம். இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தலைவர் அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!