நாடு திரும்பினார் ஜனாதிபதி     

ஜப்பானுக்கு உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.

ஜப்பானின் புதிய பேரரசரின் முடிசூட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக, ஜப்பான் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்று கடந்த 21ஆம் திகதி ஜனாதிபதியுடன் 21 உறுப்பினர்கள் ஜப்பான் சென்றிருந்தனர்.

இந் நிலையில் தனது விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நேற்றிரவு 11.35 மணிக்கு சிங்கப்பூர் விமான சேவை மூலமாக ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!