கோட்டாபயவின் தேர்தல் பரப்புரை       

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் ஜனாதிபதி தேர்தல் கொள்கை பரப்புரைகள், கரியமில தாக்கம் குறைந்தவையாக, சுற்றுச் சூழலோடு முடிந்தளவுக்கு ஒத்திசைந்தவையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

‘சுதந்திரமாய் சுவாசிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இந்த செயற்திட்டம் முயற்சிக்கப்பட்டுவருகிறது.

இந்த திட்டத்தின் ஊடாக – தேர்தல் பேரணிகளால் ஏற்படும் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கும், தங்கள் பரப்புரை கூட்டங்களிளால் ஏற்படும் உக்கக்கூடிய கழிவுகளைப் பொருத்தமான முறையில் சேகரித்து அகற்றுவதற்கும் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தேர்தல் பரப்புரைகளின் முடிவில், தமது ஒட்டுமொத்த தேர்தல் பிரச்சாரத்தின் கரியமில வெளியேற்றம் அதிகுறைந்த மட்டத்தில் இருந்ததான சான்றிதழினை – அங்கீகாரம் பெற்ற ஒரு சுயாதீன சூழலியல் அதிகாரியிடமிருந்து பெறவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இந்த திட்டத்தின் ஒரு கட்டமாக இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற தமது தேர்தல் பரப்புரை பேரணிக்கு இணையாக அங்கு 550 மரங்களை நடும் திட்டத்தினை கோட்டாபய ராஜபக்ச முன்னெடுக்கவுள்ளார்.

இந்த திட்டத்திற்கு அமைவாக கோட்டாபய ராஜபக்ச, 550 மரக் கன்றுகளை தமிழ் இளைஞர்களிடம் இன்று யாழ்ப்பாணத்தில் கையளிக்கவுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!