கல்முனை – நற்பிட்டிமுனை பிரதேசத்தில் கைக்குண்டு மீட்பு   

அம்பாறை மாவட்டம் கல்முனை – நற்பிட்டிமுனை பிரதேசத்தில் வெடிக்காத புதிய கைக்குண்டு மீட்கப்பட்ட நிலையில், பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை, கிட்டங்கி, சேனைக்குடியிருப்பு, பாண்டிருப்பு வீதியை இணைக்கும் சந்திக்கு அருகாமையில் இன்று காலை குறித்த புதிய கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

வீதியோரத்தில் பயணம் செய்த நபர் ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கைக்குண்டு வெடிக்கும் நிலையில் காணப்படுவதனால், பிரதான வீதி மற்றும் உள்ளக வீதிகளினூடான போக்குவரத்திற்கு பொலிஸார் தற்காலிகமாக தடை விதித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற கல்முனை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டு இராணுவத்தினரும், வெடி குண்டு செயலிழக்கும் படையினரும் சம்பவ இடத்தில் செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!