நாட்டின் தற்போது காணப்படும் மழை வீழ்ச்சி தொடரும்.

இலங்கைக்கு தெற்காக காணப்படும் வளிமண்டலத் தள்ளுமுக்க நிலையானது தெற்கு கடற்பரப்புகள் ஊடாக நாட்டிற்கு மேற்காக காணப்படும் கடற்பரப்புகளைநோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதனால் குறிப்பாக வடக்கு, கிழக்கு, தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவமாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை ஒக்டோபர் 29 ஆம் திகதி வரை அதிகரிக்கும் என எதிர்கூறப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என  தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, தென் மற்றும் சப்ரகமுவமாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும்சில இடங்களில் 150-200 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக மத்திய மலைநாட்டின் நுவரெலியா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் மற்றும் தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவித்தல் விடப்பட்டுள்ளது .

இலங்கைக்கு தெற்காக காணப்படும் வளிமண்டலத் தாழமுக்க நிலையானது தெற்கு கடற்பரப்புகள் ஊடாக நாட்டிற்கு மேற்காக காணப்படும் கடற்பரப்புகளை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.இதன் காரணமாக தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு மற்றும் மேற்கு கடற்பரப்புகளில் பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் கொழும்பு ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகள் கடும் மழை/ இடியுடன் கூடிய மழை, திடீரென்று கடல் கொந்தளித்தல் மற்றும்காற்றின் வேகமானது அவ்வப்போது 70-80 கிலோமீற்றர் வரை திடீரென்று அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என மீனவர்கள் அறிவுறுத்தப்படுவதோடு கடலில் பயணம் செய்வோர் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது .(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!