முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி க.தங்கேஸ்வரியின் உடல் நல்லடக்கம்   

ஈழத்தின் பிரபல பெண் எழுத்தாளரும் இலங்கையின் தொல்லியலில் பெண் ஆய்வாளர் என்ற பெருமையினையும் கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி க.தங்கேஸ்வரியின் உடல் நேற்று மாலை மட்டக்களப்பு,வவுணதீவு குறிஞ்சாமுனை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஈழத்தின் பிரபல பெண் எழுத்தாளரும் இலங்கையின் தொல்லியலில் பெண் ஆய்வாளர் என்ற பெருமையினையும் கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி க.தங்கேஸ்வரி தனது 67வது வயதில் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார்.

கடந்த சில வருடங்களாக இரண்டு சீறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் நேற்ற முன்தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

2004ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் ஐந்து வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டவர்.

2010ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளீர்க்கப்படாமையினால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதனை தொடர்ந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாட்டினை குறைத்து, எழுத்துப்பணி பொதுப்பணிகளின் தன்னை ஈடுபடுத்திவந்ததுடன் கிழக்கு மாகாணம் தொடர்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பல வரலாற்று தடங்களை எழுதியுள்ளார்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தொன்மைகளை ஆராய்ந்து பல நூல்களை எழுதியுள்ளதுடன் நோய்வாய்ப்பட்டிருந்தவேளையிலும் கூட தனது ஆய்வுப்பணியை கொண்டு தொடர்ந்து எழுதிவந்தார்.

அன்னாரின் மறைவு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பேரிழப்பாகும் என புத்திஜீவிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் வவுணதீவு, கன்னன்குடாவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நேற்று மாலை வவுணதீவு- குறிஞ்சாமுனை மாயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!