ஆஸ்திரேலியா 134 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி .

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று காலை ஆரம்பமானது.

டோஸ் வென்ற இலங்கை அணி களதடுப்பை முதலில் செய்தது. தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பின்ச் மற்றும் டேவிட் வார்னர் இலங்கை அணியின் பந்து ஆரம்பத்துடப்பட்டத்தை தொடர்ந்தனர்

பின்ச் 8 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் 64 ஒட்டகளுடன் ஆட்டமிழந்த நிலையில், மறுபுறம் வார்னர் அதிரடியாக விளையாடினார். அவருடன் மேக்ஸ்வெல் கைகோர்த்து 7 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் 62 ஒட்டகளுடன் பெரேராவிடம் பிடிகொடுத்து கொடுத்து வெளியேறினார்.

தொடர்ந்து வார்னர் ஆட்டமிழக்காமல் சதம் பூர்த்தி செய்தார் அவர் 56 பந்துகளில் 100 ஓட்டைகளை 10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்உள்ளடங்களாக பெற்றுக்கொண்டார்,20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழந்து 233 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .இதன் மூலம் இலங்கைக்கு 234 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து இலங்கை அணியில் ஆரம்பத்தில் இருந்து ரன்களை சேர்க்க வீரர்கள் தவறினர் . தொடக்க ஆட்டக்காரர்களான குணதிலக 11 மற்றும் மென்டிஸ் 0 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ராஜபக்ச 2 பெரேரா 16, பெர்னாண்டோ 13,மற்றும் சனாக 17) சில்வா 5 சன்டாகன் 6, ரஜித 0 ஓட்டங்களுடன் வெளியேறினர்.

இலங்கை அணியின் மலிங்க 13 ரன்களுடனும், பிரதீப் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களை எடுத்தது இதன் மூலம் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 134 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆட்ட நாயகனாக டேவிட் வார்னர் அறிவிக்கப்பட்டார். எதிர்வரும் புதன்கிழமை அடுத்த போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!