கல்முனையில் புதிய ஜனநாயக முன்னணியின் பிராந்திய காரியாலயம் திறப்பு!

கல்முனையில் புதிய ஜனநாயக முன்னணியின் பிராந்திய காரியாலயம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் கல்முனை பிராந்திய காரியாலயம் அமைச்சர் அனோம கமகேவினால் நேற்று திறந்து வைத்துவைக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஏ.ஆர்.செலஸ்டினா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கருணாரட்ன அத்துகோரள, ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ரஸ்ஸாக், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய அனோம கமகே, சுய தொழில் முனைவோருக்கு சுய தொழில் ஊக்குவிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தி வைக்கபடும் என உறுதியளித்துள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!