இன்று, வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் செய்த, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், சர்வ மத குருக்கள் மற்றும் குறிப்பிட்ட சில வர்த்தகர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
வவுனியா தவசிக்குளம் தனியார் விடுதியில் இடம்பெற்ற சந்திப்பில், நாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாடுகளுக்கு மத்தியில், சமய மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.(சி)