கிளிநொச்சியில் டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு!

கிளிநொச்சி, முறிகண்டி பகுதியில் டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்கள் தப்பியோடியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு 7.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்து வீதிக்கு டிப்பர் வாகனத்தை சாரதி செலுத்தியபோதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

டிப்பர் வாகனத்தின் பின் சில்லில் துப்பாக்கி சன்னம் பாய்ந்துள்ளபோதும், எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உடனடியாக 119 அவசர பொலிஸாருக்கு அழைத்து முறைப்பாடு செய்தபோதிலும், உடனடி விசாரணை இடம்பெறவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!