உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் இன்றைய தினம் தீபாவளி தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
இருளை நீக்கி ஒளியைப் பரப்பும் தீப ஒளித்திருநாள் தான் இந்த தீபாவளி.
மக்கள் மனதில் உள்ள இருளையும், அகந்தை, ஆணவம், தீய எண்ணங்களை நீக்கி, தர்மம், நேர்மை, ஒழுக்கம், பகிர்தல் எனும் தீபத்தை ஏற்றும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
இலங்கை வாழ் இந்துக்கள் மட்டுமன்றி இந்தியா, நேபாளம், சிங்கப்பூர், மலேசியா போன்ற பல நாடுகளில் செறிந்து வாழும் இந்துக்கள் இன்றைய தினம் தீபாவளி தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
அனைவருக்கும் டான் ரிவியின் தீபாவளி வாழ்த்துகள்.(நி)