சுதந்திரக் கட்சியை நேசிப்பவர்கள் குடும்ப ஆட்சி தலைதூக்க இடமளிக்க மாட்டார்கள் – பொன்சேகா!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வீழ்ச்சிக்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுமே காரணம் என, பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முல்கிரிகல நகரில் இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியை தேர்தல் பிரசாரமாக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது ஆட்சிக்காலத்தில் மோசடி செய்யப்பட்ட தேசிய மோசடி தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிப்பது இல்லை.

தேசிய பொருளாதாரத்தை கடந்த அரசாங்கமே சீரழித்தது. கடந்த அரசாங்கத்தில் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்திருந்தால், 2015 ஆம் ஆண்டு ஒவ்வொரு தனி நபரும் சொகுசு வாகனத்திற்கு சொந்தகாரர்கள் ஆகியிருப்பார்கள்.

தேர்தல் பிரசாரத்திற்காக அனைத்தினையும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட முடியாது. கடந்த அரசாங்கத்தில் அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து அபிவிருத்திகளிலும், அவரது குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு காணப்பட்டது.

அதனூடாக தேசிய நிதி கொள்ளையடிக்கப்பட்டது. பாரிய போராட்டத்தின் மத்தியிலே நல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளோம். எமது ஆட்சிலும் சில குறைப்பாடுகள் காணப்பட்டது.

அதற்கு அரசியல் ரீதியான காரணிகள் பல செல்வாக்கு செலுத்தியது. ஆனால் எந்நிலையிலும் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு துணை போகவில்லை. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!