தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் பேசப்படுபவை அனைத்தும் பொய் பிரசாரம் – டக்ளஸ்!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மொழியில் வரவில்லை எனவும், ஆனால் தமிழ் மக்களின் பிரச்னைகள் தொடர்பாக சொல்லப்படவில்லை என்பது பொய்யான விடயம் என, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்று, வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…

வழமை போன்று பொய்யான பிரச்சாரங்கள்தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, ஆனால் தமிழ் மொழியில் இன்னும அந்த தேர்தல் விஞ்ஞாபனங்கள் வரவில்லை என்பது தான் உண்மை. நாங்கள் எங்களது பிரச்சாரங்களில், ஈபிடிபி கட்சியின் வெளியீடுகளிலே நாங்கள் என்னென்ன விடயங்களை கதைத்திருக்கிறோம் என்னென்ன விடயங்களை வைத்திருக்கின்றோம் என்று பல தடவைகள் சொல்லியிருக்கிறோம். இதில் ஒரு இடத்தில் தமிழ் மொழி பெயர்பு தலைப்பு கூட தமிழர் முஸ்லீம்கள் சகோதரத்துவம் என்று சொல்லி சிங்களத்தில் கூட இருக்கின்றது.

நாங்கள் என்னென்ன கோரிக்கைகளை முன்வைத்தோமோ அது எல்லாம் பெரும்பாலும் உள்ளடங்கியதாகவே இத்தேர்தல் விஞ்ஞாபனம் வந்திருக்கின்றது.

குறைபாடு என்னவென்றால் உடனடியாக தமிழ் மொழியில் வழங்க முடியவில்லை என்பதே. இன்னும் ஓர் இரு நாட்களில் தமிழ் மொழியில் வெளிவரும் போது அவை தொடர்பாக பார்க்க கூடியதாக இருக்கும்.

ஆனால் ஒரு இணையத்தளம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒன்றும் இல்லை எல்லாம் புறக்கனிப்பென்று செய்தி வெளியிட்டு இருந்தது. அதன் பின் அந்த இணையத்தளம் தமிழ் அரசியல் பிரமுகர் வெளியிட்டதாக செய்தி வெளியிட்டிருந்தது.

நாங்கள் ஏற்கனவெ சொன்னது போன்று அரசியல் கைதிகளின் விடுவிப்பு சம்மந்தமாக, காணி, நிலங்கள் விடுவிப்பு சம்மந்தமாக, முன்னாள் போராளிகளின் வாழ்க்கைதரத்தை உயர்த்துவது தொடர்பாகவும், காணாமல் போன உறவுகளுக்கு பரிகாரம் கானுவது தொடர்பாகவும் பல விடயங்கள் வெளிவந்துள்ளது.

அரசியல் தீர்வு என்றால் எங்களுடைய அரசியல் யாப்பிலே இருக்கின்ற விடயம் அதாவது மாகாணசபை முறைமை ஆகவே இருக்கின்ற ஒன்றை மீண்டும் சொல்ல வேண்டியதில்லை அது அவ்வாறே நடைபெறும்.

ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் நாடாளுமன்ற தேர்தல் அல்லது மாகாணசபை தேர்தலுக்கு செல்வார்கள். ஏற்கனவே தமிழ் மக்களின் போராட்டத்தின் ஊடாக இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பு கிடைத்தது. இந்த மாகாணசபை முறைமையானது அரசியல் யாப்பில் உள்ளது அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரன்டு வாக்கோ அல்லது சர்வஜன வாக்கோ தேவையில்லை.

இதை தென்னிலங்கை மக்கள் எதிர்க்க மாட்டார்கள். ஏன் என்றால் தென்னிலங்கை மக்கள் அதனை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர். அத்தோடு இந்தியாவினுடைய பக்க பலமும் இருக்கின்றது.

ஆனால் சின்ன ஒரு குழப்பமும் இருக்கின்றது. ஆதாவது ஆறு தமிழ் கட்சிகள் கூடிய போதும் ஒரு கட்சி ஏதோ ஒரு காரணத்தை கூறி விலகிச்சென்றுள்ளது, மீதி ஐந்து பேர் ஏதோ ஒன்றை கையெழுத்து போட்டுள்ளனர். இதில்; நிர்ப்பந்தம் காரணமாகவும் கையெழுத்து போட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அதே நேரம் இவர்களின் நோக்கம் வாக்குகளை அபகரித்தல் மற்றும் தென்னிலங்கையில் ஒரு இனவாத சூழலினை ஏற்படுத்துதலும் தான், இதன் ஊடாக அவர்கள் இழந்து போன செல்வாக்கை மீட்டுக்கொள்வதற்கும் வாக்குகளை அபகரிப்பதும்தான் இவர்களின் கூட்டு அமைந்திருக்கின்றது மற்றும் படி அதில் பெரிதாக சொல்லும் அளவில் ஒன்றும் இல்லை.

அரசிற்கு நான் மேலதிகமான ஆதரவை வழங்கி வந்தேனே தவிர எந்த சந்தர்ப்பத்திலும் அரசிற்கு முட்டுக்கொடுப்பவராக இருந்ததில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் நான்கரை வருடத்திற்கு மேல் எல்லா வரவு செலவுத்திட்டத்திற்கும், முழு ஆதரவு கொடுத்து அதில் பங்காளியாக இருந்தது போல் அரசிற்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு இருக்கவில்லை.

இரண்டாவது விடயம் எனது தம்பியை நீண்ட காலமாக காணவில்லை ஆனால் எனது தந்தை இறக்கும்வரை எனது தம்பி உயிருடன் இருக்கிறார் என்றுதான் சொல்லிக்கொண்டு இருந்தார்.

அதைவிட என்னுடன் வெலிக்கடையில் இருந்து கொல்லப்பட்டவர்களுடைய தாய் தகப்பன் மரணிக்கும் வரை என்னுடன் தொடர்பு கொண்டு தாங்கள் வெற்றிலை போட்டு பார்த்தது மை போட்டு பார்த்தது அவர்கள் அங்கிருக்கிறார்கள், இங்கிருக்கிறார்கள் என என்னிடம் சொன்னார்கள் அது அவர்களுடைய ஆதங்கம், அதை என்னால் விளங்கிக்கொள்ள முடியும்.

அதனால் காணாமல் போன உறவுகளின் பிரச்சினையை விளங்கிக்கொள்ளக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் இன்னுமொரு வாய்ப்பு கிடைத்தால் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்வேன்.

இந்த தேர்தல் விஞ்ஞாபனத்திலே ஏதாவது மக்களுடைய பிரச்சனைகள் தவற விடப்பட்டால் நாங்கள் ஆட்சியில் பங்கெடுக்கின்ற போது கடந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டோமோ அதேபோலவே செயற்படுவோம். என தெரிவித்தார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!