வவுனியாவில், பாடசாலைகளுக்கு இடையில் கலாசார போட்டி!!

ஒளி விழாவை முன்னிட்டு, வவுனியா பாடசாலைகளுக்கு இடையில், கலாசார போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள, இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில், போட்டிகள் இடம்பெற்றன.
இதன் போது, நடனம், பேச்சு, நாடகம் மற்றும் குழு நடனம் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

நடுவர்களால் புள்ளிகள் வழங்கப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு, பாடசாலை ஒளி விழாவின் போது, பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. இன்றைய போட்டிகளில், வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட 25 பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!