வவுனியாவில், 50 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகள் அழிக்கப்பட்டுள்ளன!!

வவுனியாவில், நன்னீர் மீன்பிடி குளங்களில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்ட வலைகள், நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்து அழிக்கபட்டுள்ளது.

வவுனியா மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் விரிவாக்கல் காரியாலத்தினால், இந்த வருடத்தில் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைளில் போது கைப்பற்றபட்ட, சுமார் 50 இலட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் மற்றும் முக்கூட்டு வலைகள், இன்று வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் எரித்து அழிக்கப்பட்டது.

வலைகள் அழிப்பு நடவடிக்கையின் போது, வவுனியா உதவி மாவட்ட செயலாளர் ந.கமலதாஸ், நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபை பொறுப்பதிகாரி யோ.நிசாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!