யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில், காங்கேசன்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய தெல்லிப்பழை பகுதியில் 78 கிலோ கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்கு இடமான ஹைபிரிட் வாகனத்தை பொலிஸார் சோதனைக்குட்படுத்தியபோதே கஞ்சா மீட்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 1கோடியே 97 இலட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த தொகை கஞ்சாவை கடத்திச்சென்ற சந்தேக நபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.(சி)