யாழில், அனர்த்த முகாமைத்துவ குழு உருவாக்க்கம்!!

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஆலோசனையுடன் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் ஆரம்ப நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் இன்பம் தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற்றது.

இதன்போது, அனர்த்தம் ஒன்று ஏற்படும்போது அதனை எவ்வாறு எதிர்கொள்வது, மக்களை எவ்வாறு பாதுகாப்பது, முன் எச்சரிக்கைகள் தொடர்பாகவும் தற்போது உள்ள அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்புக்கள் தொடர்பாகவும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் பொ.நந்தவர்மன், உடுவில் அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சு.வரதராஜன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.

அனர்த்த முகாமைத்துவ குழு தெரிவு செய்யப்பட்டது.அதன் தலைவராக டிலக்சன், செயலாளராக சியானி, பொருளாளராக புவிந்தன், உபதலைவராக ஜின்ரன், உப செயலாளராக துஸ்யந்தன் உட்பட 11 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

இதில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மகாசபை தலைவரும் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்க தலைவருமான இ.முரளீதரன், வடமராட்சி கிழக்கு, தெல்லிப்பளை, சண்டிலிப்பாய், பிரதேசங்களிற்க்குட்பட்ட இளைஞர்கள், யுவதிகள் என சுமார் 40 பேர் வரை இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!