தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் அனுர!!

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அனுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய திட்டம் 5 ஆண்டுகளில் நிறுத்தப்படும்.

மக்களின் வரிப்பணத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அவர்களது பாரியார்களுக்கும் வழங்கப்படும் வரப்பிரசாதங்களை நிறுத்தப்படும்.
அமைச்சரவை 30 ஆக மட்டுப்படுத்தப்படும்.

இராஜாங்க மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள் இனிமேல் இருக்கப்போவதில்லை.நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வாகனத்தை பெற்றுக்கொள்வதற்கான சலுகைகள் இல்லாம செய்யப்படும்.

ஜனாதிபதி தேவைக்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி 90 விகிதமாக குறைக்கப்படும்.நாடு முழுவதும் காணப்படும் ஜனாதிபதி மாளிகைகள் சுற்றுலா ஹோட்டல்கள், கலாசார மையங்கள் மற்றும் நூலகங்களாக மாற்றப்படும்.

திருடப்பட்ட மக்களின் பணங்கள் மீண்டும் மக்களிடமே வழங்கப்படும்.நாட்டில் எந்தவொரு தீவிரவாதமும் உருவாக அனுமதிக்க மாட்டோம்.
என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!