தேர்தல் தினத்தன்று விசேட இயற்கை அனர்த்த நடவடிக்கை

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் திடீர் இயற்கை அனர்த்த நிலை ஏற்பட்டால் எதிர்கொள்வதற்கு விசேட வேலைத் திட்டம் நடைமுறை படுத்தப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் விசேட சந்திப்பொன்றில் திர்மாணிக்கப்பட்டுள்ளது.

திடீர் இயற்கை அனர்த்த நிலை ஏற்பட்டால் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லல் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு ஏற்படக்கூடிய அழுத்தங்களை கட்டுப்படுத்துதல், இடம்பெயந்தோர் முகாம்களில் இருக்கும் நிலை ஏற்பட்டால் அங்குள்ள வாக்காளர்களை வாக்கு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லும் முறை தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக உதவிப் பணிப்பாளர்அவர் மேலும் தெரிவித்தார். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!