ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிக்க சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பது எந்த பயனும் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் நேற்றுநடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் சிறந்த நண்பர்கள் ஆகவே மீண்டும் ஏமாறாமல் கோட்டாபயவை தோற்கடிக்கும் எண்ணத்தில் சஜித்திற்கு வாக்களிப்பதில் எந்த பயனும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்
, சகோதரத்துவத்துடன் கூடிய நாட்டை உருவாக்க தாம் தயாராக உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.(சே)