ஜனாதிபதிக்கு கிடைக்கும் சலுகையும் மக்களுக்கு பகிரப்படும்-சஜித்

ஜனாதிபதிக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பொதுமக்களுக்கு பகிரப்படும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி ​வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பெலிஅத்த பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

பொதுமக்களின் வாக்குகளில் நியமிக்கப்படும் ஒவ்வொரு பிரதிநிதியும் சேவை விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கக்கூடிய வகையில் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை எதிர்வரும் 16 ஆம் திகதியின் பின்னர் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் இதன் போது தெரிவித்தார்.

மேலும் போலி அரசியலுக்கு தனது பொது பிரதிநிதித்துவத்தை பயன்படுத்துபவர்களை அரசியல் துறையில் இருந்து முழுவதுமாக நீக்குவதாக தெரிவித்த அவர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதி முறையை இரத்து செய்வதாக தெரிவித்தார்.

குறித்த பணத்தை கொண்டு பொதுமக்களுக்கு சேவை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், நாடு பூராகவும் சென்று பொது மக்களின் கஷ்ட நஷ்டங்களை கேட்டறிந்து வருடத்தின் 365 நாட்களும் சேவை புரிய அர்ப்பணிப்பதாக சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!