எமது அரசாங்கத்தில் விவசாயத்துக்கே முன்னுரிமை-கோட்டபாய

மக்களின் வாழ்க்கைத் நிலையை விவசாய உற்பத்தி மூலம் உயர்த்துவதே எமது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

வெலிமடை, கெப்பெட்டிபொல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் எமது அரசாங்கத்தின் கீழ் வௌிநாட்டு விவசாயிகள் பாதுகாக்கப்பட மாட்டார்கள் எனவும், உள்நாட்டு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்குவதாக உறுதியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தி விவசாயத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக மேலும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!