இனவாதத்தின் மூலம் ஆட்சியை கப்பற்ற ராஜபக்ச தரப்ப முயற்சி – சேனசிங்க!!

நாட்டில் இனவாதத்தை தூண்டி ஆட்சிபீடம் ஏறுவதற்கு, ராஜபக்ஷ தரப்பினர் முனைகின்றனர் என, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘பெரும்பாலான நாடுகளில் இனவாதத்தை முன்னிருத்தி ஆட்சி கைப்பற்றிய வரலாறு காணப்படுகின்றது.

அதாவது, சிரியாவில் அசாட், சதாம் உசைன், லிபியாவில் கடாபி, முகாபே, இட்லர் ஆகியோர் இனவாதத்தின் ஊடாகவே ஆட்சி செய்தனர். அதேபோன்றதொரு செயற்பாட்டினையே ராஜபக்ஷவினரும் தற்போது முன்னெடுத்துள்ளனர்.

மேலும் தொடர் குண்டுத்தாக்குதலுக்கு காரணமான சஹ்ரானை காரணம் காட்டி, ஆட்சியை கைப்பற்றுவதற்கு ராஜபக்ஷ முயன்றுள்ளனர்.

சஹ்ரான் என்ற பயங்கரவாதியை கோட்டபாய தற்போது வணங்குவாரென நான் நினைக்கின்றேன். டிலான், கம்மன்பில ஆகியோர் இதற்கு முன்னர் அவரை மிகவும் தவறாக குறிப்பிட்டனர்.

நான் கூறுவது பொய்யென்றால், இந்த காணொளியின் ஊடாக மக்கள் புரிந்து கொள்ள முடியும். அதாவது டிலான், ‘கோட்டபாயவினால்தான் இதற்கு முற்பட்ட தேர்தலில் மஹிந்த தோல்வியை சந்தித்ததாக குறிப்பிட்டார்.

அதேபோன்று கம்மன்பில, பஷில் ராஜபக்ஷ நல்லவர் என்பதை வெளிப்படுத்துவதற்காக, ‘பிரதேச சபையில் கூட அங்கம் வகிக்காத ஒருவருக்கு, நாட்டை வழிநடத்துவதற்கு கொடுப்பது ஏற்புடைய விடயம் அல்ல என கோட்டபாய குறித்து கூறியிருந்தார்.

இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, இன்று அவருக்கு ஆதரவு வழங்குவதற்காக வேறு விதமாக பேசுகின்றார்கள். இவர்கள் மக்களை ஏமாற்ற முனைகின்றார்கள்.

இராணுவ வீரர்கள் குறித்து பேசும் ராஜபக்ஷக்கள், யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த சரத் பொன்சேகாவை சிறையில் வைத்ததை மக்கள் மறக்க கூடும்.
சரத் பொன்சாகாவை ஏன் சிறையில் அடைத்தார்கள் என்பதற்கான காரணம் உண்மையாக எனக்கு தெரியாது.

சரத் பொன்சேகா போன்ற சிறந்த வீரர் உண்மையாக இல்லை. கோட்டபாயதான் அவரை சிறையில் அடைப்பதற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும்.

அதுமாத்திரமின்றி ஊடகவியலாளர் லசந்த விக்ரமசிங்க கொலை, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு நாச காரியங்களை புரிந்தவருக்கு மக்கள் ஆதரவு வழங்கப் போகின்றீர்களா?

எனவே இவ்விடயங்களை எல்லாம் கவனத்திற்கொண்டு, உரிய முடிவை மக்கள் எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!