தமிழ் மக்களை நசுக்கும் அரசு : புவனேஸ்வரன்!!

வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரன், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில், நேற்று முன்னிலையானார்.


இந்த நிலையில், நேற்று இடம்பெற்ற விசாரணைகள் தொடர்பில், இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…

தமிழ் மக்களின் வாழ்வில் மறக்க முடியாத வலிகளை தந்த முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதும், கடந்த கால யுத்த சூழ்நிலைகளின் போதும் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவு கூறுவதற்காக, வருடா வருடம் மக்கள் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகளையும், யுத்தத்தில் இறந்த தங்களுடைய பிள்ளைகளை நினைவு கூறுவதற்காக கார்த்திகை மாதம் 27 ம் திகதி மாவீரர் தினத்தினையும் கொண்டாடுகின்றனர்.

இவ்வாறான நினைவு நாட்களை கொண்டாடுவதற்கு மக்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாக சர்வதேசத்திற்கு இந்த அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், திரைமறைவில் இவற்றை நிறுத்துவதற்கு சதி செய்கின்றதா என்ற சந்தேகத்தை தன்னுடைய விசாரணை மூலம் தோற்றுவித்ததாக வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற விசாரணைகளின் போது ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைவாகவும், கடந்த மே மாதம் 12ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கப்பலடி பகுதியில் இடம்பெற்ற தமிழின படுகொலை நினைவு வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் தொடர்பாக குறித்த ஊடகவியலாளர் வெளியிட்ட செய்திகளை மேற்கோள்காட்டியுமே என்னிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

குறிப்பாக இந்த பகுதி தற்போது ராணுவத்தினரால் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஆரம்ப நிகழ்வுகளில் மேற்கொண்ட அந்த கப்பலடிப்பகுதிக்கு தற்போது மக்கள் செல்வதற்கு குறித்த பகுதியில் வீதியோரத்தில் இருக்கின்ற ராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

எனவே இவ்வாறான நிலையில் இவ்வாறான தடைகளை ஏற்படுத்துவது நிகழ்வுகளை செய்பவர்களை மறைமுகமாக அழைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைகள் என்ற போர்வையில் அவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் ஊடாக இந்த செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக.

இவ்வாறான நிகழ்வுகளில் பங்கு பற்றியவர்களை இவ்வாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பது என்பது முற்று முழுதாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு செயற்பாடு என்பதையும் இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்ட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் அவர்களும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் பாராளுமன்றில் பேச வேண்டும் என தெரிவித்தார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!