சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க படாதபாடுபடும் தமிழரசுக் கட்சி!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் சமர்ப்பிப்பதற்காக புதிய கோரிக்கை மனு ஒன்றைத் தயாரிக்க தமிழரசுக்கட்சி விரும்புவதாக அக்கட்சியுடன் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

 

தமிழ் மக்களின் ஏகோபித்த கோரிக்கையாக ஏற்கனவே 13 அம்சக்கோரிக்கையை 5 கட்சிகள் கூட்டாகத் தயாரித்திருந்திருந்தன. ஆனாலும் அந்த கோரிக்கைகளை எந்தவொரு வேட்பாளரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதைத் தெரிந்துகொண்டே அந்த ஆவணம் தயாரிக்கப்பட்டிருந்தது. இப்போது ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்க விரும்பும் தமிழரசுக்கட்சியின் சில தலைவர்கள், அவர் ஏற்றுக்கொள்ளக்கூடிய யோசனைகளை புதிதாகத் தயாரித்து அவரிடம் கொடுத்து அதற்கு அவரின் ஒப்புதலைப் பெற்றபின்னர், அவருக்கு ஆதரவு வழங்கும் முடிவில் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் நெருக்கமான அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமது இந்த புதிய யோசனைக்கு ஆதரவைப் பெறுவதற்காகவே ஐந்து கட்சிக் கூட்டத்தை நடாத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும், அதனை அறிந்ததாலேயே கொழும்பில் நேற்று நடாத்தப்பட்ட கூட்டத்தை ஐந்து கட்சிகளில் இடம்பெற்றது இரண்டு கட்சிகள் தவிர்த்துக்கொண்டதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

எதிர்வரும் 30ம் திகதி யாழ்ப்பாணத்தில் கூடி பேசி புதிய கோரிக்கை மனுவைத்தயாரிக்க தமிழரசுக்கட்சி தீவிரம் காட்டுகின்றபோதிலும் அக்கூட்டத்திலும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈபி ஆர்எல் எவ் நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன கலந்துகொள்ளாது என்றே அந்த கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!