முல்லையில், கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் உட்பட்ட பல்வேறு நகர்ப் பகுதிகளில், கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துமாறு, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகள் நிற்பதனால், வாகன சாரதிகள் மற்றும் பொது மக்கள், பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின், அனைத்து பிரதேசங்களில் உள்ள நகர பகுதிகளிலும் வீதிகளிலும் நிற்கின்ற கட்டாக்காலி கால்நடைகள் காரணமாக, வாகன சாரதிகள் மற்றும் பொது மக்கள் தொடர்ச்சியாக விபத்துக்களுக்கு உள்ளாகி வருவதுடன், பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே, கால்நடைகளின் உரிமையாளர்கள், கால்நடைகளை உரிய வகையில் பராமரிக்குமாறும் அல்லது அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரதேச சபைகள், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!