கொழும்பு பல்கலை மாணவர்கள்களுக்காக, கிழக்குப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரினால் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட 52 மாணவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டுமெனக் கோரியும், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர் கல்விக்கான மகாபொல கொடுப்பனவை அதிகரிக்கக்கோரி நேற்று கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதாதைகள் ஏந்திய வண்ணம் மாணவர்கள் தமது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமெழுப்பினர், சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் அனைத்து பீடங்களையும் சேர்ந்த பெரும்பான்மை இன மாணவர்கள் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!