தமிழ் மொழி பாடசாலைகள் விடுமுறை

எதிர்வரும் 28ம் திகதி முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த அனைத்து மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் 27ம் திகதி ஞாயிறு தீபாவளி பண்டிகையை கொண்டாடும் இந்து மாணவர்கள்,மற்றும் ஆசிரியர்களின் வசதிக்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சர், அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த விடுமுறை தினத்திற்கு பதிலாக வேறொரு பொருத்தமான தினத்தில் பாடசாலையை நடத்துவதற்கு பாடசாலை அதிபர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் என். எம். ரணசிங்க அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!