தேர்தல் பிரசார பணிகள் தெடர்பில் பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுக்கு விளக்கம்!

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை மற்றும் தூரநோக்கு சிந்தனையை எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டு செல்வது என்பது தொடர்பான கலந்துரையாடல் யாழ் சிவலிங்கப் புளியடி ஓட்டுமடம் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

தேர்தலுக்கான வடக்கு மாகாண பிரதான அமைப்பாளர் ரெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உடுப்பிட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி, மானிப்பாய், ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கோப்பாய் தேர்தல் தொகுதியில் பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்துவரும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் கேள்விகளுக்கு பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆதரவாளர்கள் கூறவேண்டிய பதில்கள் மற்றும் கோட்டாபயவின் கொள்கைகள், எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் எவ்வாறு விளக்கமளிக்க வேண்டும் என்பது தொடர்பில் வடமாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே விளக்கமளித்தார்.

தேர்தலுக்கு இன்னமும் 23 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் எவ்வாறு அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி பிரசாரங்களை முன்னெடுப்பது சிறிய சிறிய கூட்டங்களை அதிகளவில் நடாத்துவது மற்றும் தேர்தலுக்கான காரியாலயங்களை திறப்பது அதன் ஊடாக அப்பகுதி ஆதரவாளர்களை எமது வேட்பாளரின் கொள்கைக்குள் உள்வாங்குவது தொடர்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள லண்டன் மாநகர உறுப்பினர் பரமலிங்கம் விவேகானந்தன் தொண்டர்கள் மத்தியில் தெளிவுபடுத்தினார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!