மலையக பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு!

மலையகத்தின் பல பகுதிகளுக்கு கடந்த ஐந்து நாட்களாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருதால் மக்கள் சமையல் எரிவாயுவை தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு கடந்த ஒரு வார காலமாக டயகம, அக்கரபத்தனை, மன்ராசி, ஹோல்புறுக், பொகவந்லா, நோர்வூட் மஸ்கெலியா, ஹட்டன், கொட்டகலை, தலவாக்லை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

சமையல் எரிவாயு இல்லாததால் பல தேநீர் கடைகள், உணவகங்கள், இனிப்பு பண்டங்கள் விற்பனை நிலையங்கள், மூடப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

திபாவளி பண்டிகையை கொண்டாட தமிழ் மக்கள் ஆயத்தமாகி வரும் நிலையில், எரிவாயு இல்லாததன் காரணமாக பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக குடும்ப மக்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் ஒரு சில விற்பனை நிலையங்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் மிகவும் குறைவாக பெற்றுக்கொடுக்கப்பட்டதாகவும், அந்த எரிவாயு சிலிண்டர்கள் காலை வேளையிலேயே முடிந்து விட்டதாகவும் விற்பனையார்கள் தெரிவிக்கின்றனர்.

பண்டிகை ஒன்று வரும்போது போதியளவு எரிவாயு பெற்றுக்கொடுக்காதிருப்பது கவலையளிப்பதாகவும், இது தொடர்பாக சம்பந்தபட்டவர்கள் பொறுப்பு கூற வேண்டும் எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!