தோட்ட தொழிலாளர்களின் தீபாவளி பண்டிகை முற்பணம் தொடர்பில் சிலர் நாடகம்!

தோட்ட தொழிலாளர்களின் தீபாவளி பண்டிகை முற்பணம் தொடர்பில் சிலர் நாடகம் ஆடுவதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை பொகவந்தலாவ பகுதியில் ஏற்பாடு செய்யபட்ட தேர்தல் பிரசார கூட்டத்தின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் தீபாவளி பண்டிகை முற்பணம் தொடர்பில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமை குறித்து சிலர் மக்கள் மத்தியில் சில புதிய நாடகங்களை அரங்கேற்றுவதாக கூறினார்.

இந்த மக்கள் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் உபதலைவரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ், நோர்வுட் பிரதேச சபையின் தலைவர் ரவிகுழந்தைவேல், நோர்வுட் பிரதேச உறுப்பினர்களான அசோக், மாடசாமி சரோஜா, அருள்நாயகி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!