மீனகயா புகையிரதம் இயந்திரம் எடுத்து செல்வதில் சிக்கல்

அவுக்கண உப புகையிரத நிலையத்துக்கு அருகில் தடம்புரண்ட மீனகயா புகையிரதம் மீள தண்டவாலயத்துக்கு எடுத்து செல்வது சிக்கல் உள்ளதாக புகைரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

தடம்புரண்ட புகைரதத்தின் ஆறு பெட்டிகளும் தண்டவாலயத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக புகைரத திணைக்களத்தின் போக்குவரத்து துறை அதிகாரி வீ.எம் .போல்வத்தகே தெரிவித்துள்ளார்.

புகையிரத இயந்திரம் பாலத்தில் தடம்புரண்டு இருப்பதால் மீண்டும் தண்டவாலயத்துக்கு எடுத்து செல்வது சிக்கல் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மீனகய புகையிரதம் கடந்த 21ம் திகதி அவுக்கண உப புகையிரத நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டது இதன் காரணமாக கொழும்பில் மட்டக்களப்பு மகவை புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புகையிரத இயந்திரத்தை விரைவாக அகற்றி கொழும்பு மற்றும் மட்டகளப்பு போக்குவரத்து சேவையை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!