கிளிநொச்சியில் தேர்தல்கள் ஆணைக்குழுவால் தடுக்கப்பட்ட போராட்டம்!!

கிளிநொச்சி செருக்கன் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் உப்பள தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று, தேர்தல்கள் திணைக்களத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணி, ஏ9 வீதி ஊடாக, பரந்தன் முல்லைத்தீவு வழியாக, செருக்கன் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பள தொழிற்சாலை வரை செல்வதற்கான திட்டமிடப்பட்டிருந்தது.

பேரணி ஆரம்பிக்கப்பட்டு செருக்கன் சந்தியை சென்றடையும் போது, பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இயற்கையை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில், விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

பேரணி தொடர்பில், கிளிநொச்சியில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக, பொலிசாரினால் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட தேர்தல்கள் முறைப்பாட்டு பிரிவின் உதவி தெரிவத்தாட்சி அலுவலர் எஸ்.சத்தியசீலன், குறித்த பகுதிக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

போராட்டம் மேற்கொள்வதற்குரிய முறையில், பொலிசாரிடம் அனுமதி பெறப்படவில்லை எனவும், அவ்வாறான அனுமதியை பெற்று, இவ்வாறான போராட்டங்களை நடாத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கினார்.

இதேவேளை, உப்பள தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படும் பணிகளை, தேர்தல் காலம் வரை நிறுத்துவதற்கான கடிதம் மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகவும், அங்கு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், உதவி தெரிவத்தாட்சி அலுவலர் எஸ்.சத்தியசீலன் குறிப்பிட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து, போராட்டம் நிறுத்தப்பட்டது.

போராட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் இணைந்து கொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!