மட்டக்களப்பில் சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு!!

சர்வதேச முதியோர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில்  நடைபெற்றது.

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும்  நிகழ்வு  சங்கத்தின் தலைவர்  பி .ஸ்ரிபன்  தலைமையில் ஜெயந்திபுரம் சிரேஷ்ட பிரஜைகள் சங்க பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது நிகழ்வில் கலந்து கொண்ட சிரேஷ்ட பிரஜைகளின் வினோத நிகழ்வுகளும் ,இடம்பெற்றதுடன்  அவர்களுக்கான பரிசில்கள் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக சிவஸ்ரீ ஜெகதீஸ்வரக் குருக்கள் ,  அருட்தந்தை , பிறைனர் செலர் ,பிரதம அதிதியாக  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ .வாசுதேவன் , மற்றும் அதிதிகளாக ,மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்  எஸ் .அருள்மொழி , கிராம அபிவிருத்தி சங்க தலைவர் . தோமஸ் கந்தையா , வை டப்ளியு சி எ நிறுவன தலைவர் றஞ்சனி தைதரன் , கிராம சேவை உத்தியோகத்தர் , அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ஜெயந்திபுரம் சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின்  உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

.

 

 

 

 

 

 

 

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!