அவசராமாக தொடர்பு கொள்ளவும் – 021 20 59 228!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த, சிவகுரு குருநாதன் என்பவரின் சடலத்தை பொறுப்பேற்குமாறு, வைத்தியசாலை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில், கடந்த 10 ஆம் மாதம் 10 ஆம் திகதி, 14 ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்ட, யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த, 60 வயதுடைய சிவகுரு குருநாதன் என்பவர், வைத்தியசாலை விடுதியில் 22-10-2019 அன்று உயிரிழந்தார்.

இவரது இறந்த உடல், வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

எனினும் உடலை இவரது உறவினர்கள் எவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை எனவும், இவரது உடலை பொறுப்பேற்க விரும்புபவர்கள், வைத்தியசாலை நிர்வாகத்துடன், 021 20 59 227, 021 20 59 228 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் காமினி விமலசேன அறிவித்துள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!